பொதுவாக வருடத்திற்கு ஒரு முறையாவது நாம் தங்களின் உடலை முழுமையாக பரிசோதித்து கொள்ள வேண்டும்.
அத்துடன் இதய நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்கள் உரிய மருத்துவரை அணுகி அவர்களிம் பரிந்துரைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
தங்களின் குடும்பத்தில் யாருக்காவது இதய நோய் பாதிப்பு இருந்தால் நிச்சயமாக பரம்பரைக்கு இருக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அந்த வகையில் இதய நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகளை தொடர்ந்து நாம் தெரிந்து கொள்வோம்.
1. பொதுவாக சர்க்கரை வியாதியுள்ளவர்கள் இதய நோய் ஏற்படும் என யாருக்கும் தெரியாது. சர்க்கரை கட்டுக்குள் இல்லாத நேரங்களில் இதய நோய் நம்மை பாதிக்க அதிகமான வாய்ப்பு இருக்கின்றன.
உடலிலுள்ள சர்க்கரை இரத்த குழாய்களை பாதிக்கின்றது. இதன் காரணமாக வளர்ச்சிதை மாற்ற கோளாறு ஏற்படுகின்றது. ஆகவே குடும்பத்தில் இவ்வாறு பிரச்சினைகள் இருந்தால் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
2. இதய நோயாளர்கள் மருத்துவரை பார்க்க வேண்டும் என்றால் தனியாக அனுப்புவதை தவிர்த்து பக்கத்தில் யாராவது செல்ல வேண்டும். ஏனெனின் பல வருடங்களாக இருந்து வரும் இதய நோய் ஏதாவது கோளாறு காட்டும் போது குடும்பத்தினருக்கு தெரிய வேண்டாம் என சிலர் நினைப்பார்கள்.
3. அடிக்கடி மூச்சு விட முடியாமல் திணறல் ஏற்படுகின்றது என்றால் கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். ஒரு நாள் என்றும் இல்லாமல் திடீரென மூச்சு நின்று விட வாய்ப்புகள் இருக்கின்றது. அத்துடன் இதய நோயிற்கான அறிகுறியாகவும் பார்க்கப்படுகின்றது.
4. நெஞ்சில் சுருக் சுருக்கென குத்துவது போல் உணர்ந்தால் அது இதய நோய்க்கான அறிகுறியாகவும் இருக்கலாம். ஆரம்ப கட்டத்தில் இருக்கும் போதே உரிய மருத்துவரை நாடுவது அவசியம்.
5. உடலில் கொழுப்பு அதிகமாக இருக்கும் பொழுது இரத்த குழாய்கள் அடைப்பு ஏற்பட்டு இதயம் பாதிக்க வாய்ப்பு இருக்கின்றது. இதனால் அடிக்கடி இரத்த பரிசோதனை மேற்க் கொள்வது அவசியம்.

