சபரிமலையில் நாளுக்கு நாள் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
இந்த கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் நடவடிக்கை எடுத்துவருகின்றது.
நீதிமன்ற உத்தரவின் பேரில் பக்தர்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்ற நிலையில் ஒரு சில நாட்கள் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கு செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தினமும் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மண்டல பூஜைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில் நீதிமன்றத்தின் உத்தரவின் படி ஒரு நாளில் 90 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்யலாம் என்ற கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டது. இந்த நடைமுறை தற்போது பின்பற்றப்படுகிறது.
இந்த நிலையில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், சிறுவர் மற்றும் முதியவர்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்து நிற்பதால் சிரமப்படுவதாக முறைப்பாடுகள் எழுந்தன.
இதனைத்தொடர்ந்து அவர்களுக்கு தனி வரிசை அமைப்பது தொடர்பாக கேரள நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. எனவே பம்பையில் தேவஸ்தான அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தனி வரிசை ஏற்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சபரிமலை தரிசனத்திற்கு 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர், சிறுமிகளுக்காக நேற்று (18) முதல் தனி வரிசை அமுலுக்கு கொண்டுவரப்பட்டது.
தரிசனம் முடிந்து ஊர் திரும்பும் பக்தர்களுக்கு பம்பையில் இருந்து நிலக்கல் செல்ல போதிய பேருக்கு வசதியை ஏற்படுத்திக் கொடுக்க மாவட்ட ஆட்சியருக்கு கேரள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.