கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில் ரயில் தடம் புரண்டதன் காரணமாக பிரதான மற்றும் கரையோரப் பாதைகளில் இயங்கும் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன.
நேற்று (06-07-2023) மாலை கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கொழும்பு கோட்டையில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த புகையிரதம் தடம் புரண்டது.
இதனால் குறித்த பாதைகளில் இயங்கும் புகையிரதங்கள் தாமதமாகும் என இலங்கை புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.