இலங்கைக்கு 20 மில்லியன் டொலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சரி செய்ய பல நாடுகள் இலங்கைக்கு உதவி செய்து வருகிறது.
அந்த வகையில் சுமார் 20 மில்லியன் டொலர் நிதி உதவியை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden) ஜீ – 7 உச்சிமாநாட்டில் உறுதிப்படுத்தினார்.
பெரும் நெருக்கடியில் உள்ள கோட்டாபயவிற்கு இந்த தகவல் பெரும் ஆதரவாக உள்ளதாகவும் ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தென்னிலங்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன.