கொவிட் தடுப்பூசிகளை நாடும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையில் குறைவு காணப்படுவதாக மகப்பேறியல் மற்றும் பெண்நோயியல் நிபுணர் டொக்டர் பிரதீப் டி சில்வா தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியை பெற்றுக் கொள்வதால் எவ்வித ஆபத்தும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், தடுப்பூசி பெற்றுக்கொள்ள அவர்கள் தயக்கம் காட்டுவது குறித்து கவலைப்படுவதாக மருத்துவர் சுட்டிக்காட்டுகிறார்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு தடுப்பூசி போடுவதில் இதுவரை எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும், தடுப்பூசி போடுவதில் கர்ப்பிணிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது என்றும் மஷருத்துவர் தெரிவித்தார்.
எனவே கர்ப்பிணிப் பெண்கள் தடுப்பூசியை விரைவில் அருகிலுள்ள மருத்துவமனை அல்லது மருத்துவ அதிகாரி அலுவலகத்தில் இருந்து பெறுமாறு மருத்துவர் கேட்டுக்கொள்கிறார். இந்த நேரத்தில் தடுப்பூசியை செலுத்துவது பாதுகாப்பான முடிவு என்று மருத்துவர் மேலும் சுட்டிக்காட்டுகிறார்.