காத்தான்குடியில் இருந்து கொழும்பு(Colombo) நோக்கி பயணித்த பேருந்தொன்று இன்று அதிகாலை(20) மரத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, 14 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழை காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி வீதியின் ஓரத்தில் இருந்த மரத்தில் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது, பேருந்தில் சுமார் 49 பயணிகள் பயணித்துள்ளதுடன், விபத்து காரணமாக பேருந்து சாரதி மற்றும் உதவியாளர் உட்பட 14 படுகாயமடைந்து பேர் சிகிச்சைக்காக சேருநுவர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
எனினும், பின்னர் சாரதி மற்றும் 9 பயணிகள் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலையும், பேருந்து சாரதியின் கவனயீனமுமே விபத்துக்கு காரணம் என தற்போதைய விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

