கொழும்பு டாம் வீதியில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியில் இருந்து மீட்கப்பட்ட சடலம் 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புறக்கோட்டை – டாம் வீதியில் வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக சந்தேகத்திற்கு இடமான பயணப் பெட்டியொன்று காணப்படுவது தொடர்பில் வர்த்தகர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, மீட்கப்பட்ட சடலம் 20 வயது மதிக்கத்தக்க யுவதி ஒருவருடையது என தெரியவந்துள்ளது.அத்துடன், மீட்கப்பட்ட சடலம் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த சிசிடிவி காணொளியில் பதிவாகியிருந்த காட்சிகளின் அடிப்படையில், அந்த பயணப் பொதியை நபர் ஒருவர் கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த நபர் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.