கொழும்பில் உள்ள விருந்தகம் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை கச்சேரியிலிருந்து பிரபல பாடகர்கள் விலகியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு Gotabaya Rajapaksa ஆதரவாக குரல் கொடுத்த பாடகர் ஒருவரும் குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருந்த நிலையிலேயே, பாடகர்கள் இரண்டு பேரும் இசை கச்சேரியிலிருந்து விலகிக்கொண்டனர்.
இதேவேளை, சர்ச்சைக்குரிய பாடகர், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ததோடு, நல்லாட்சி அரசாங்கத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பாடல்கள் மற்றும் இசை காணொளிகளையும் வெளியிட்டிருந்தார்.
மேலும், அவரது சில இசை காணொளிகளின் உள்ளடக்கம் மூலம் திருநங்கைகளை கிண்டல் செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் இலங்கையின் மிகவும் பிரபலமான இரண்டு இளம் பாடகர்களும் தமது நிலைப்பாட்டை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர்.