நம் உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் மஷ்ரூம் காஃபி குடித்தால் பலவித நன்மைகள் கிடைக்கும். இந்த முறையில் செய்து பகிருங்கள்.
பொதுவாகவே காஃபியை காலையில் எழுந்ததும் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்போம். காஃபி கொட்டையில் இருந்து அரைக்கப்பட்ட தூளை, கொதிக்க வைத்த பாலில் சர்க்கரையுடன் கலந்து நாம் பருகுவோம். அதுவும் குளிர்கால நேரங்களில் பலருக்கும் காஃபி குடிக்காமல் இருக்க முடிவதில்லை.
சமூக வலைதளங்களில் சில உணவுகள் அடிக்கடி டிரெண்டாகி வரும். அந்தவகையில் காளான் – காஃபி தான் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஒன்லைன் ஸஸ்டோர் அல்லது பிரத்யேகமாக காஃபி ஸ்டோர்களில் இந்த காளான் காஃபி கலவை (Mushroom Coffee) கிடைக்கிறது.
போர்த்துகீசிய காளான்களை ஊறவைத்து அதனை உலர்த்தி பவுடர் செய்ய வேண்டும். பின்பு, அதனுடன் காஃபி கொட்டை சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். இப்போது நல்ல மணமான காளான் காஃபி கலவை தயார். வழக்கமாக நீங்கள் காஃபி தயார் செய்வது போல இந்த கலவையை வைத்து தயார் செய்ய வேண்டும்.
இந்த காளான் காஃபி நாம் வழக்கமாக அருந்தும் காஃபியை விட சுவையும், மனமும் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்.
இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் கூறுகையில், “காளான் காஃபியில் Vitamin பி6 மற்றும் Vitamin டி, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உள்ளன. இதை குடிப்பதால் கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவது மட்டுமல்லாமல் அழற்சியை தடுக்க உதவும்” என்றார்.
Vitamin பி6 கொண்ட இந்த காளான் காஃபியை நாம் அருந்துவதால் நல்ல தூக்கம் வரும் என்று கூறுகிறார்கள். இருப்பினும், செரிமானப் பிரச்சினைகள், சிறுநீரக பிரச்சினைகள் இருப்பவர்கள் இதனை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். காஃபியில் உள்ள பொட்டாசியம் சத்து சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதால் வேண்டாம் என்கிறார்கள்.