கொரோனா முன்னெச்சரிக்கையை பின்பற்றாத பிரபல சபாரி மோலை இழுத்து கத்தார் வர்த்தக அமைச்சு மூடியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கொரோனா வைரஸ் கத்தாரில் மீண்டும் வேகமாக பரவி வரும் நிலையில் அதிகளவான வாடிக்கையாளர்கள் ஒன்று கூடியமையினால், அபூஹமூர் பகுதியில் அமைந்துள்ள பிரபல சபாரி மோல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. சபாரி மோல் மூடப்பட்டமை அதன் நிருவாக விடுத்துள்ள அறிக்கையில், அதிக கூட்டம் கூடியதன் காரணமாக கத்தார் வர்த்தக அமைச்சு தங்களுக்கு தற்காலிக தடை விதித்துள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் ஏனைய சபாரி மோல் கிளைகளில் தங்களது சேவைகளைப்பெற்றுக் கொள்ள முடியும் என்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.