பிரித்தானியா மகாராணி, எலிசபெத் கொரோனா தடுப்பூசி போட்டதால் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறியுள்ளார்.பிரித்தானியாவின் மகாராணி, இரண்டாம் எலிசபெத் தனது கணவர் 94 வயதான இளவரசர் பிலிப்புடன் கடந்த ஜனவரி மாதம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
இவரது மூத்த மகனும் வாரிசுமான இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். தற்போது பிரித்தானியாவில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொண்டது குறித்து மகாராணி கூறுகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதனால் எனக்கு சிறிய பிரச்சினை கூட ஏற்படவில்லை.
தடுப்பூசி போடுவது குறித்து தயக்கம் கொள்பவர்கள் இதுபற்றி சிந்திக்க வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் எளிது என்று அதைப் போட்டுக் கொண்டவர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன.தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் நிச்சயம் பாதுகாப்பு பெறுவார்கள். தடுப்பூசி போடவில்லை என்றால் அந்த பாதுகாப்பை பெற முடியாது.
எனவே மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டியது அவசியம். தடுப்பூசி போட்டுக் கொண்டால் பாதுகாக்கப்பட்ட உணர்வு ஏற்படும். தடுப்பூசி போடும் திட்டத்தை நான் முழுமையாக வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார்.மேலும், உடல் நிலை சரியில்லாமல் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மன்னர் பிலிப், தடுப்பூசி மிகவும் அவசியம் என்றும், அதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.