மறைந்த நடிகர் மனோபாலாவின் மனைவி செய்துள்ள செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகரும் இயக்குநருமான மனோ பாலா உடலநலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 69. கடந்த 15 நாட்களாக கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த அவர் அவரது வீட்டில் காலமானார்.
இவருடைய மறைவு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகத்தையும் பெரும் அளவு பாதித்தது. திரைப்பிரபலங்கள் பலரும் நேரில் இரங்கல் தெரிவித்தனர். தொடர்ந்து, மனோபாலாவின் மரணத்திற்கு காரணம் அவருக்கு இருந்த குடிப்பழக்கம் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், அவரது மனைவி செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனோபாலாவின் குடும்ப வழக்கப்படி ஒருவர் இறந்து விட்டால், அவர்களின் உடைகள் மற்றும் உடைமைகளை தீயிட்டு கொளுத்துவது வழக்கம்.
ஆனால் அப்படி செய்வதை விரும்பாத மனோபாலாவின் மனைவி உஷா, தன்னுடைய கணவரின் உடைமைகள் அனைத்தையும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுத்துள்ளார். மேலும் கணவரின் நினைவாக ஒரே ஒரு வாட்சை மட்டுமே தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
.