தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறுகையில்,ஏழு வருடங்களாக தாம் குடியுரிமையை இழந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு இந்தநிலையில் தம்மை சிறையில் இருந்து விடுவிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வந்தபோது விதிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு தாம் கட்டுப்பட்டுள்ளதாகவும் எனவே தம்மால் அரசியல் பேச முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக 2021 ஆம் ஆண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ராமநாயக்க 2022 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டார்.