பனைமரத்தில் ஏறிய குடும்பஸ்த்தர் தவறுதலாக கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவமானது நேற்றையதினம்பளை – புலோப்பளை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் அப்பகுதியைச்சேர்ந்த 4 பிள்ளைகளின் தந்தையான ஞானபிரகாசம் அமலதாஸ் (வயது-56) என்பவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தொழிலுக்கு சென்ற கணவன் நீண்ட நேரமாக காணவில்லை என தேடிச்சென்ற போது பனைமரத்தின் கீழ் இறந்து கிடந்துள்ளார்
இந்த நிலையில் குறித்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டடு பின் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
பிரேத பரிசோதனையின் பின் சடலம் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.