காலை நேரத்தில் உண்ணும் உணவு தான் அன்றைய நாளை தீர்மானிக்கின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க போகின்றீர்களா? இல்லை சோர்வாகவும் , மந்தமாகவும் இருக்க போகின்றீர்களா என்பதை தீர்மானிப்பது காலை உணவு மட்டுமே.
இன்றைய இயந்திர காலப்பகுதியில் பெரும்பாலோனோர் காலையில் தேநீரோ, காஃபியோ குடித்து விட்டு கடைகளில் சிற்றுண்டிகளை வாங்கி உண்பதை வழக்கப்படுத்தியுள்ளனர்.
இதனால் இளம் வயதிலேயே சக்கரை வியாதி , இரத்த அழுத்தம் என பல நோய்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நாம் காலையில் உண்ணும் சில உணவுகள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும். ஆனால் காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பல உள்ளன.
காலையில் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது என பலர் பழச்சாறு குடித்து வருகின்றனர். பழங்களில் நார்ச்சத்து பெருமளவில் இல்லை. இதனால் இரத்தத்தில் சக்கரையின் அளவு கூட வாய்ப்புள்ளது. அதற்கு பதிலாக தேசிக்காய் ஜீஸ் , வெள்ளரிச்சாறு , வெதுவெதுப்பான நீர் என்பவற்றை அருந்த முடியும்.
இட்லி , தோசை , இடியப்பம் போன்ற உணவுகளை தற்போது நேரம் ஒதுக்கி செய்து சாப்பிடும் வழக்கம் குறைந்து விட்டது. சென்விச் , பேக்கரி உணவுகளுக்கு தான் முன்னுரிமை. மாச்சத்துள்ள உணவுகளில் சாதாரணமாக சக்கரையின் அளவு அதிகமாக காணப்படும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
பலர் ஒரு கப் தேநீர் அருந்திவிட்டு தான் காலையில் மற்ற வேலைகளை தொடங்குகிறார்கள். காலையில் தேநீர் அருந்தும் பழக்கம் உள்ளவர்கள், அதனை அருந்தவில்லை என்றால் அசௌகரியமாக உணர்கிறார்கள்.
இருப்பினும், காலையில் தேநீர் அருந்துவதால் உடல் நலத்திற்கு பல பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக அமிலத்தன்மை, வயிறு எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம், மேலும் இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.
தானியங்கள் பலரின் காலை உணவின் ஒரு பகுதியாகும். காலை உணவில் தானியங்கள் சேர்ப்பது ஆரோக்கியமானது என பலரும் நம்புகின்றனர். இருப்பினும், இது முற்றிலும் உண்மை இல்லை. தானியங்களில் பெரும்பாலான பகுதிப்பொருட்களாக சர்க்கரை நிறைந்துள்ளது.
இந்த சர்க்கரை அதிகம் கொண்ட தானியங்களை, நாம் காலை உணவாக எடுத்துக்கொண்டால் நமது உடலின் ரத்தத்தில், சர்க்கரையின் அளவை அதிகரிக்க செய்துவிடும்.
காலையில் எழுந்ததும் காபி அருந்தும் பழக்கம் நம்மில் பலருக்கும் உள்ளது. காலையில் காபி குடிப்பது கார்டிசோலின் அளவை அதிகரித்து, ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். இதனால் நமது இரத்த அழுத்தம் அதிகரித்து பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
எனவே காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக காலை உணவுக்குப் பிறகு குடிக்கலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்