பயணத்தடையை மீறி வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்கு தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சீல் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று மட்டக்களப்பு காத்தான்குடி நகரில் இடம் பெற்றது. காத்தான்குடி பிரதான வீதி உட்பட உள் வீதிகளிலும் பொலிசார் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தினர் நகர சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன் போது பயணத்தடையை மீறி வர்த்தக நிலையங்களைத் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட 18 வர்த்தக நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. காத்தான்குடி பொலிஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் எம் எம் ஜவாகிர் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தினர் நகர சபை உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் உட்பட பலரும் இந் நடவடிக்கையில் பங்கு கொண்டிருந்தனர்.