தமிழகத்தில் காதலியை பார்க்க வந்த இளைஞரை அந்த பெண்ணின் தந்தை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே பூதிப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்குமார்(22). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில், வினோத்குமார் தன்னுடன் கல்லூரியில் படித்த பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான செல்வராஜ் என்பவரது மகள் மோனிகாவை கல்லூரி காலத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் பெற்றோர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை, காலையில் மோனிகாவை சந்திப்பதற்காக வினோத்குமார் பிள்ளையார்நத்தம் சென்றுள்ளார்.