பிரபல தனியார் தொலைக்காட்சியின் குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமான ஸ்டண்ட் அப் காமெடியன் புகழ், இன்று தன்னுடைய நீண்ட நாள் காதலியான பென்சியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
காமெடி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களுக்குப் அறிமுகமான புகழ், அந் நிகழ்ச்சி மூலம் இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே சேர்ந்தது.
அதன் பின்னர் ‘வலிமை’, ‘எதற்கும் துணிந்தவன்’ உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.
இதுதவிர ‘மிஸ்டர் ஜூ கீப்பர்’ என்ற புதிய படத்தில் கதாநாயகனாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில் மிக எளிய முறையில் புகழ் காதலியை இன்றையதின கரம்பிடித்துள்ளார்.
சினிமா பிரபலங்கள் வாழ்த்து
இவர்களது திருமணத்தில் இயக்குநரும், நடிகருமான சசிகுமார் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
இந்நிலையில் புகழ் – பென்ஸியா ஜோடிக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருவதுடன் அவர்களது திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.