சினிமா நடிகைகள் பலரும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சியை கையில் எடுத்து சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்கள் வெளியிட்டு வருகின்றனர். காட்டினால்தான் பட வாய்ப்பு என்ற கலாச்சாரம் உருவாகி விட்டதா என்பதுதான் தெரியவில்லை.
தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா மேனன். கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் நடித்து வரும் ஐஸ்வர்யா மேனனுக்கு பெரிய அளவு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை.
அதுவுமில்லாமல் இளம்வயதிலேயே முகம் ஆன்ட்டி போல இருந்ததால் சமீபத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்ட தன்னுடைய முகத்தை இளமையாக மாற்றிக் கொண்டார். இதன் காரணமாக மீண்டும் அவருக்கு பட வாய்ப்புகள் வரிசையாக வர தொடங்கின.
கடைசியாக அவர் நடித்த சில படங்கள் எதுவுமே சரியாக செல்லவில்லை. இருந்தாலும் பட வாய்ப்புகளுக்காக தொடர்ந்து தனது சமூக வலைதளப் பக்கங்களில் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இது தமிழ் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் கண்ணில் பட்டதா என்று தெரியவில்லை.
ஆனால் தெலுங்கு பக்கம் ஐஸ்வர்யாவின் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ரவி தேஜா நடிக்கும் அடுத்த படத்தில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் ஐஸ்வரியா மேனன்.
சமீபத்தில் ரவி தேஜா நடிப்பில் வெளியான திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் ரவி தேஜா நடிப்பில் உருவாகும் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு நிலவி வருகின்றன. மேலும் தெலுங்கு சினிமாவுக்கு கிளாமர் மிகப் பொருத்தமாக இருக்கும் என்பதால் ஐஸ்வர்யா மேனன் அங்கே ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கலாம்.