கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இச்சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், பத்மநாதன் சத்தியலிங்கம், சண்முகம் குகதாசன், ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத் ஆகியோர் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.