கனடாவில் தேவாலயத்தில் பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.வடக்கு எடோபிகோகில் உள்ள மவுண்ட் ஓலிவ் செவந்த் டே அன்வண்டிஸ்ட் தேவாலயத்தில் தான் இந்த சம்பவம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் 27ஆம் திகதி நடந்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், குறித்த தேவாலயத்துக்கு வந்த பெண்ணை அணுகிய கென்னித் கெயில் (56) என்ற நபர் அவர் மீது பாலியல் ரீதியான தாக்குதலை இரு முறை நடத்தியுள்ளார்.
பின்னர் அப்பெண் கென்னித்தை தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளார் என கூறியுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக சமீபத்தில் கென்னித் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.கென்னித் வரும் 5ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.