தாயக விடுதலைக்காக தங்களது இன்னுயிர்களை ஆகுதியாக்கிக் கொண்ட மாவீரர்களை நினைவுகூர்ந்து வருடம்தோறும் நவம்பர் இருபத்தேழாம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த வருடமும் மாவீரர் நாள் வடக்கு கிழக்கு உள்ளிட்ட தமிழர்கள் வாழும் பகுதி எங்கும் நினைவேந்தல் நிகழ்வு மிகவும் எழுச்சியாக இடம்பெற்றது.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தனது கணவரை நாட்டுப்பற்றாளராகவும் 3 பிள்ளைகளை மாவீரர்களாகவும் கொண்ட வடிவேல் நேசம் பொதுச்சுடர் ஏற்றியதை தொடர்ந்து ஏனையவர்களும் தமது உறவுகளுக்கு சுடறேற்றி அஞ்சலி செலுத்தினர்.