ஆப்பிள் (Apple) நிறுவனம் அதன் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் (Apple Vision Pro Headset) சாதனத்தை எப்போது அறிமுகம் செய்யுமென்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் WWDC 2023 நிகழ்வின் போது விஷன் ப்ரோ ஹெட்செட் (Vision Pro Headset) என்ற மாடலை அறிமுகம் செய்தது.
இது Virtual reality அனுபவத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லக் கூடிய மிக்ஸ்டு ரியாலிட்டி ஹெட்செட் (mixed-reality headset) சாதனமாகும். இதில் சுவாரஸ்யமான hardware மற்றும் visionOS software -களை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த சாதனத்தை பற்றி ஆப்பிள் நிறுவனம் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. ஆனால், பிரபலமான Apple analyst Mark Gurman வெளியிட்டுள்ள தகவலின் படி, Apple Vision Pro Headset அடுத்த ஆண்டு பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.
Vision Pro Headset -ன் தயாரிப்பு சீனாவில் நடைபெற்று வருவதாகவும், ஜனவரி 2024 -க்குள் அதன் தயாரிப்பை ஆப்பிள் நிறுவனம் முடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அதேபோல், இந்த சாதனம் வருவதை உறுதி செய்யும் விதமாக, சாப்ட்வேர் டெவெலப்பர்களுக்கு (software developers) Get Ready என்று ஆப்பிள் நிறுவனம் அனுப்பியுள்ளது.
முதலில் இந்த சாதனம் அமெரிக்காவில் அறிமுகம் செய்யவிருப்பதாகவும், அடுத்து உலக சந்தைகளில் அணைத்து இடங்களிலும் அறிமுகம் செய்யவிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும், Vision Pro Headset வாங்கும் பயனர்களுக்காக பிரத்தியேகமான Mobile apps அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த apps வாடிக்கையாளர்களின் தலையை ஸ்கேன் செய்து, தலைக்கு ஏற்ற பேண்ட் (band) லைட் சீல்களை (light seal) தேர்வு செய்ய அனுமதிக்கும்.
Vision Pro Headset சாதனத்தின் விலையை பொறுத்தவரை 3499 டொலர் என்று அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.2,91,307 விலையாகும்.