தமிழகத்தில் காதலனுடன் சேர்ந்த 4 வயது மகனை கொலை செய்த மனைவிக்கு நீதிமன்றம் 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர் சிவானந்தம். இராணுவ வீரரான இவருக்கு வனிதா(29) என்ற மனைவியும், 4 வயதில் நந்தீஸ்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், வனிதாவுக்கும், இளையான்குடியை சேர்ந்த கார் டிரைவரான சிவகார்த்திக் (28) என்பவரின் பழக்கம் கிடைத்துள்ளது.
இவர்களின் பழக்கம் நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர்கள் இருவரும் சிறுவன் நந்தீஸ்குமாருடன் ஆந்திரா மாநிலம் திருப்பதிக்கு சென்று தனியாக வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளனர்.
இவர்களின் உல்லாச வாழ்க்கைக்கு, நந்தீஸ்குமார் இடையூறாக இருந்ததால், வனிதா மற்றும் கார்த்திக்ராஜ் அடிக்கடி சிறுவனை அடிக்கடி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.
அதன் படி கடந்த 2015-ஆம் ஆண்டு நந்தீஸ்குமார் இவர்கள் இரண்டு பேரும் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவனை, தூக்கி கொண்டு ஊருக்கு சென்று வருகிறோம் என வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டு கிருஷ்ணகிரி சென்றுள்ளனர்.
அப்போது ஊர் திரும்பும் வழியிலேயே நந்தீஸ்குமார் இறந்து விட, கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் உள்ள மலையடிவாரத்திற்கு சிறுவன் நந்தீஸ்குமாரின் சடலத்தை எடுத்து சென்று வனிதாவும், சிவகார்த்திக்கும் புதைத்துவிட்டு, மீண்டும் திருப்பதிக்கு திரும்பியுள்ளனர்.
குழந்தை இல்லாமல் அவர்கள் வந்ததை பார்த்த வீட்டின் உரிமையாளர், எங்கே குழந்தை? என கேட்டுள்ளார். அதற்கு உடல் நிலை சரியில்லாததால் ஊரிலேயே குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டோம் என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதனால் சந்தேகம் அடைந்த வீட்டின் உரிமையாளர் இது குறித்து திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன் பின் பொலிசார் அவர்கள் 2 பேரிடமும் நடத்திய விசாரணையில், குழந்தையை அடித்து கொன்றதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து சிறுவனின் சடலம் புதைக்கப்பட்ட இடத்தை பார்த்த பொலிசார், அவர்கள் இருவர் மீதும் வழக்கும் பதிவு செய்து கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் நீதிமன்றத்தில் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் வனிதாவின் கார்த்திக்ராஜா தலைமறைவாகி விட்டார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை கிருஷ்ணகிரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.
இந்த வழக்கின் விசாரணை நேற்று நடந்த நிலையில், காதலனுடன் சேர்ந்து மகனை அடித்துக் கொலை செய்த வனிதாவுக்கு, 17 ஆண்டுகள் சிறை தண்டனையும்,10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.