இந்தியாவில் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் கான்பூரை சேர்ந்தவர் சோனி (30). இவருக்கும் ராகுல் என்ற நபருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்த நிலையில் 10 வயதில் மகள் உள்ளார்.இந்த நிலையில் ராகுலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்த சோனி, விஷால் என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.
தற்சமயம் விஷால் பெங்களூரில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார். சோனி தனது மகளுடன் கான்பூரில் வசித்து வந்தார்.இந்த சூழலில் நேற்று முன் தினம் இரவு கணவருடன் போனியில் பேசிய சோனி பின்னர் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இரவு நேரத்தில் தாயின் அறைக்கு சென்ற மகள் சோனி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கத்தினார்.இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து சடலத்தை கீழே இறக்கி பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் சடலத்தை கைப்பற்றிவிட்டு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.