நாம் இந்த பூலோகத்தில் வாழும் ஆயுள் வரை கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கவே முடியாது. கணவனும் மனைவியும் உயிரோடு இருக்கும் வரை கட்டாயமாக அவர்களுக்குள் பிரச்சனை வந்து கொண்டே தான் இருக்கும். அதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் கிடையாது. பிரச்சனை உள்ள வாழ்க்கை தான் ருசிகரமாக அமையும் என்பதையும் நம்மால் மறுத்து விட முடியாது. இருப்பினும் அந்த பிரச்சனை நம் குடும்ப வாழ்க்கையை பாதித்து விடக்கூடாது என்பதற்காக சில விஷயங்களில் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து தான் ஆக வேண்டும். நம் குடும்பத்திற்காக, நம் குழந்தைக்காக என்று இல்லற வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து செல்பவர்கள், யாரும் கெட்டுப் போவதில்லை என்ற கருத்தோடு இந்த பதிவினை தொடர்வோம்.
கணவன் மனைவிக்குள் பிரச்சனை வராமல் இருக்க இரண்டு வகையான பரிகாரங்களை இன்று நாம் பார்க்கப் போகிறோம். இது பரிகாரம் கூட அல்ல. போகின்ற போக்கில் நீங்கள் செய்து வைத்து விட்டால் கூட பலிதமாகும். முதலில் ஒரு வெள்ளை பேப்பரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிவப்பு நிற பேனாவில் கணவன் பெயரையும் மனைவி பேரையும் ஒன்றாக எழுதி, அந்த சீட்டை நான்காக மடித்து சக்கரைத் டப்பாவிற்குள் புதைத்து வைத்து விடுங்கள். இது ஒரு மேஜிக் மாதிரி கணவன்-மனைவிக்குள் இந்த பரிகாரத்தை செய்த பின்பு அவர்களது வாழ்க்கை இனிமையாக மாறும். சர்க்கரையின் சுவை போலவே. ட்ரை பண்ணி பாருங்க! நம்பிக்கையோடு செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
அடுத்தபடியாக பொதுவாகவே வெற்றிலைக்கு என்று ஒரு வசிய தன்மை உண்டு. வெற்றிலையை வைத்து நாம் எந்த ஒரு பரிகாரத்தை செய்தாலும் அதன் மூலம் நமக்கு மிஞ்சுவது வெற்றி மட்டும்தான். இரண்டாவது பரிகாரத்தை எப்படி செய்வது? ஒரு சுத்தமான வெற்றிலையை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். தேன் ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். கொஞ்சமாக எடுத்து அந்த தேனை உங்களது வலது கை மோதிர விரலால் தொட்டு, இந்த வெற்றிலையின் மேல் உங்களின் வாழ்க்கை துணை பெயரை எழுத வேண்டும்.
இந்த பதிவை படிப்பவர்கள் ஆண்களாக இருந்தால், ஒரு முறை அந்தத் தேனை தொட்டு வெற்றிலையில் மனைவியின் பெயரை எழுதிவிட்டால், மனைவி உங்கள் பேச்சுக்கு கட்டுப்பட்டு இனிமையான வாழ்க்கையை உங்களுடன் ஆயுசுக்கும் தொடர்வார்கள்.
இந்த பதிவைப் படிக்கும் பெண்கள் உங்களது கணவனின் பெயரை, இப்படியாக வெற்றிலையில் எழுதி மனதார வேண்டிக் கொண்டால் ஆயுசுக்கும் உங்களது கணவர் உங்களோடு இல்லற வாழ்க்கையை இனிமையாக நடத்தி செல்வார். இல்லை கணவன் மனைவி இருவரும் சேர்ந்து, மனைவியின் பெயரை கணவரும், கணவரின் பெயரை மனைவியும் தேனை தொட்டு வெற்றிலையில் எழுத்தால் இன்னும் அந்த வாழ்க்கை மேலும் மேலும் சிறப்பாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.
இந்த வெற்றிலை வாடும் வரை உங்கள் வீட்டில் வைத்துவிட்டு, அதன் பின்பு அதை கால் படாத இடங்களில் எடுத்து போட்டு விடலாம். தவறொன்றும் கிடையாது. இந்த வெற்றிலை தேன் பரிகாரத்தை ஒரு முறை செய்தால் கூட போதும். நல்ல மாற்றங்கள் தெரியும். மீண்டும் மீண்டும் சண்டை வரும் பட்சத்தில் இப்படி இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.
ஏனென்றால் எந்த பரிகாரமும், நாட்கள் கடக்கும் போது அதனுடைய சக்தி குறையத்தான் செய்யும் அல்லவா? ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு கிளிக் ஆச்சுன்னா விடாமல் மாதத்திற்கு ஒரு முறை இப்படி செய்யலாம் தவறு கிடையாது. எல்லோருக்கும் நன்மையே நடக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனை வேண்டிக் கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.