ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்காக தயார் செய்திருந்த முப்பது பிரச்சார கூட்டங்களை குறைத்துள்ளார்.
தேர்தல் செலவுகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி செலவினங்களைக் கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிப்படையாகக் கொண்டது என கூறப்படுகின்றது.
வரும் 21 ஆம் திகதி இலங்கையில் 9 ஆவது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறாவுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பங்கேற்க ஜனாதிபதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,
ஆனால் தற்போது புதிய அறிவிப்பின் அடிப்படையில் அந்த எண்ணிக்கை அறுபதாக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் கிராம மட்டத்தில் சிறிய குழுக் கூட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
மக்கள் பேரணிகளை நடவடிக்கைகளுக்காக பஸ் வாடகை உள்ளிட்ட பாரிய தொகையை செலவிட வேண்டியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை தேர்தல் செலவு விதிமுறைகளின்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு 109 ரூபாவை மட்டுமே வேட்பாளர் ஒருவர் செலவிட முடியும் என்பது குறிப்பிடப்படத்தக்கது.