இன்றைய காலத்தில் ஆரோக்கிய பிரச்சினை பலரும் எதிர்கொண்டு வருகின்றனர். வாழ்க்கைமுறை, உணவுமுறை மாற்றத்தினால் ஏற்படும் இந்த பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.
நடைபயிற்சி மேற்கொள்வது உடல்நல பிரச்சினையை அண்டவிடாமல் தடுக்கின்றது. மேலும் நாள்பட்ட நோய் பாதிப்புகளில் இருந்தும் தடுப்பதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஒவ்வொரு நாளும் குறைந்தது 10ஆயிரம் காலடிகளாவது நடக்க வேண்டுமாம். இவை 8 கிலோ மீட்டர் நடப்பதற்கு சமமாககும். இவை இதய ஆரோக்கியத்தினை மேம்படுத்துகின்றது.
நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, மார்பக புற்றுநோய் தொடர்பான நோய் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்க தினமும் இந்த காலடிகள் நடக்கமுடியாவிட்டாலும், 4 ஆயிரம் முதல் 5 ஆயிரம் காலடைகள் கட்டாயம் நடக்க வேண்டுமாம்.
குழந்தைகளை பொறுத்தவரையில் நடப்பதற்கு மிகவும் சிரமப்படுவார்கள். ஆதலால் அவர்களை ஓடியாடி விளையாட அனுமதித்தாலே அவர்கள் ஆரோக்கியமாக காணப்படுவார்கள்.
அதாவது 40 வயதிற்குட்பட்ட பெண்கள் 12 ஆயிரம் காலடிகள் நடப்பது நல்லதாம். 40 லிருந்து 50 வயது பெண்கள் 11 ஆயிரம் காலடிகள் நடப்பதை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.
50 லிருந்து 60 வயதுடைய பெண்கள் 10 ஆயிரம் காலடிகளும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 8 ஆயிரம் காலடிகளும் நடக்க வேண்டுமாம்.
18 முதல் 50 வயதுக்குட்பட்ட ஆண்கள் தினமும் 12 ஆயிரம் காலடிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 11 ஆயிரம் காலடிகளும் நடக்க முயற்சிக்க வேண்டுமாம்.
நீரிழிவு, உடல் எடை குறைக்க நினைப்பவர்கள், உயர் ரத்த அழுத்தம் பாதிப்பு உள்ளவர்கள் படிப்படியாக காலடிகளை அதிகரிக்க வேண்டுமாம்.

