ஐபிஎல் 2024 சீசனின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது.
இந்த போட்டி நேற்றையதினம் (23-03-2024) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
நாணய சுழற்சியை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்களை பெற்றது.
174 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 18.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
இதன்படி ஐபிஎல் 2024 சீசனின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.