பிரித்தானியாவில் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்த இலங்கையர் தொடர்பான தகவலொன்று வெளியாகி உள்ளது.
பொலன்னறுவை கல்லலெல்ல, சுது நெலுகம பிரதேசத்தை சேர்த்த 72 வயதான லயனல் பிட்டியவத்தகே என்பவரே இவ்வாறு பிரித்தானிய ராணியாருடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தவர் ஆவார்.
இந்நிலையில் ராணியின் மரணம் குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியும், மனஉளைச்சலும் கொண்டிருப்பதாக லயனல் பிட்டியவத்தகே தெரிவித்துள்ளார்.
உலகத் தலைவர்களுடன் கடிதம்
பொழுதுபோக்காக உலகத் தலைவர்களுடன் கடிதம் மூலம் தான் பழகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல், இதுபோன்ற கடிதங்களை எழுதி வருவதாகவும் ராணியின் ஒவ்வொரு பிறந்தநாளிலும் ராணிக்கு வாழ்த்து அட்டையும் அனுப்பி வந்திருப்பதாகவும் கூறப்படுகின்றது .
இந்நிலையில் குறித்த நபர் இறுதியாக கடந்த ஜுன் மாதம் 21ஆம் திகதி அன்று அரச குடும்பத்திடமிருந்து கடிதம் ஒன்றை பெற்றுள்ளார்.
அதேசமயம் ராணியின் கடிதத்தில் சிம்மாசனத்தில் 72 ஆண்டுகளாகியுள்ள நிலையில் தான் பிளாட்டினம் விழாவைக் கொண்டாடியதாகவும் லயனல் பிட்டியவத்தகே குறிப்பிட்டுள்ளார்.