எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள குளத்தில் நபர் ஒருவர் திடீரென மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவமானது இன்றையதினம் பிலியந்தலை – ஹொரண வீதியில் கெஸ்பேவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக உள்ள குளத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நபர் குளத்தில் இறங்கிய போது திடீரேன மூழ்கியதால் சுற்றியிருந்தவர்கள் அவரை பிலியந்தலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
எவ்வாறாயினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் எரிபொருள் எடுப்பதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தாரா? முச்சக்கர வண்டியில் வந்தாரா? அல்லது வேறு வாகனத்தில் வந்தாரா? என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
முகத்தை கழுவிக்கொண்டிருக்கும்போதோ குறித்த நபர் குளத்தில் விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.