மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியில் வைத்து கடந்த புதன்கிழமை 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட 21 வயதுடைய சந்திரன் விதுஷன் எனும் இளைஞர் நேற்று வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்போது, பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மரணமடைந்த இளைஞனின் தங்கை தனது அண்ணனை பொலிஸார் அடித்துக் கொன்றதை நான் என் கண் முன்னே பார்த்தேன் என்று பகிர் தகவலொன்றை தெரிவித்துள்ளார் .
எனது அண்ணனுக்கு நீதி கிடைக்க வேண்டும் அதுவரைக்கு நான் சும்மா விடமாட்டன் தூக்கி போட்டு குத்தினார்கள் சுவரில் சாற்றி அடித்தார்கள் சுவர் உடைந்து போய் இருக்கு’இவர்க்ளுக்கு யார் அதிகாரம் கொடுத்தது .