திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையியலும் ஒரு திருப்புமுனையாக தான் இருக்கும். பொருத்தம் பார்த்து, மணமகன், மணமகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சம்மதித்து, அம்மி மிதித்து அருந்ததி பார்த்து ஏக போகமாக விருந்து வைத்து, அளப்பரிய சீர்வரிசைகளுடன் அமர்க்களமாக அரங்கேறும் பல திருமணங்களை நாம் கண்டுகொண்டு தான் இருக்கிறோம்.
ஆனால் அந்த பெண்ணும் பையனும் சில நாட்களுக்கு பின்னர் ஒருவருடன் ஒருவர் கருத்து வேறுபாடு கொண்டு பிரிவதோ இல்லை மாறுபட்ட கருத்துடன் வாழ்வோதோவாகவே இருக்கிறார்கள்.
அணைத்து விஷயங்களையும் சரியாக செய்தலும் இந்த பிரச்சனை இன்று வரையில் தீர்க்க முடியாததாகவே இருக்கிறது. அதன் பின்னனி என்னவென்றால், இரண்டு விஷயங்களை கூறலாம். ஒன்று பெற்றோர்களின் அவசரம், மற்றொன்று மனப்பொருத்தம் அமையமை.பெற்றோர்கள் முதலில் தனது குழந்தைகளுக்கு திருமணம் செய்ய என்னும்போது, அவர்கள் உடலளவிலும், மனதளவிலும் திருமணத்திற்கு தயாராக இருக்கிறார்களா என்று முழுவதும் தெரிந்துகொள்ளவேண்டும். திருமணத்தில் நாட்டம் இல்லாதவர்களுக்கு அதன் முக்கியத்துவம் பற்றி எடுத்து சொல்லவேண்டும். அவர்களுக்கு திருமண வாழ்வில் வரக்கூடிய பிரச்சனைகளை பற்றியும் அதை எப்படி எதிர்கொள்ளவேண்டும் என்றும் கற்றுக்கொடுப்பது பெற்றோர்களின் மிகப்பெரும் கடமையாகும்.
மனப்பொருத்தம் தான் மிகவும் முக்கியம், காரணம் என்னவென்றால் திருமணமாகப்போகும் நபர்களின் மனம் ஒருவரை ஒருவர் உண்மையாக நேசிக்க தொடங்கிவிட்டால், அவர்களுக்கு அனுசரிப்பு தன்மை வந்துவிடும். எந்த சூழ்நிலையிலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்கவோ, இல்லை பிரிந்து இருக்கவோ முயற்சிக்க மாட்டார்கள். எனவே இனியாவது இரு மனங்களை இணைக்கும் திருமணத்தை சரியாக நடத்திவையுங்கள் பெற்றோர்களே.