எங்களைப்போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என போராட்டத்தில் கலந்துகொண்ட சிறுமி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (வியாழக்கிழமை) மாவட்ட பெண்கள் வாழ்வுரிமைக் கழகத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே, சிறுமியொருவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ìஎங்களைப் போன்ற இளம் பிஞ்சுகளை சீரழிக்க வேண்டாம் என ஆணித்தனமாக கூறுகின்றேன். உங்கள் போதைக்கு நாங்கள் இரையல்ல.
சின்னஞ்சிறு பாலகர்கள் நாங்கள். உங்கள் பெயரால் எங்கள் ஒளிமயமான வாழ்வு சீரழிகிறது . மனிதா யோசி. உங்கள் சகோதரர்களாக எங்களை நேசிî என குறித்த சிறுமி உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.