இலங்கை கடற்பரப்பில் எரிந்து சேதமாகிய எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலால் இலங்கை சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்பு நீடிக்கலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
கப்பலினால் ஏற்பட்டுள்ள சேதம் வெளிப்புறத்தில் காணப்படுவதை விட கடலின் உட்புறத்தில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம் என சுற்றுச்சூழல் ஆர்வலர் மெண்டிஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கப்பலில் தீ விபத்து ஏற்பட்டதால் இலங்கை மீன்வளத் துறைக்கு ஏற்பட்ட சேதத்திற்கு ரூ .720 மில்லியன் இடைக்கால இழப்பீடு வழங்க கப்பலின் காப்பீட்டு நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.