1986 ஆம் ஆண்டுடன் ஆரம்பிக்கப்பட்ட உலக குடியிருப்பு தினம் ஒவ்வொரு அக்டோபா் மாதத்தின் முதல் திங்கட் கிழமையில் உலகம் முழுவதிலும் உள்ள சகல நாடுகளும் இத் தினத்தினை கொண்டாடடுகின்றது.
இதன்படி இம்முறை இன்று 4 ஆம் திகதி இத் தினம் கொண்டாடப்படுகின்றது.
இலங்கையிலும் இத் தினத்தில் வவுனியாவில் செட்டிக்குளம் பிரதேச செயலாளா் பிரிவில் மெனிக்பாம் பிரதேசத்தில் ´அருனோதய நகரம்´ பிரதம மந்திரியும், வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ, இந்திய நாட்டின் வெளியுரவுச் செயலாளர் ஆகியோரினால் கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் வைத்து ஸூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இக் கிராமம் மக்களிடம் கையளிக்கப்பட உள்ளது.
இவ் வீடமைப்புத் திட்டத்திற்காக இந்திய அரசின் வீடமைப்பு உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 இலட்சமும் ரூபா மாணியமும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் 1 இலட்சம் ருபாவையும் வழங்கியுள்ளது.
இக்கிராமத்திற்கு சகல அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. செட்டிக்குளம் பிரதேச செயலாரினால் 24 குடும்பங்களுக்கு அரச காணி துண்டுகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இக் குடும்பங்கள் கடந்த கால யுத்தத்தின் போது இடம்பெயா்ந்த குடும்பங்களகும். இவ் வீடமைப்புத் திட்டத்தில் 24 வீடுகள் உள்ளடக்கப்படுகின்றன. அத்துடன் உள்ளக பாதைகள், குடிநீா், மிண்சாரம் போன்ற உள்ளக கட்டமைப்பு வசதிகளும் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்திற்காக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 34.88 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. அதில் இந்திய உதவித் திட்டமும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இவ் வீடமைப்புத்திட்டத்தினை நேரடியாக வவுனியாவிற்கு வீடமைப்பு நிர்மாண மற்றும் கட்டிடப் பொருட்கள் இராஜாங்க அமைச்சா், யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துாதுவரலாயத்தின் துணைத் துாதுவரும் கலந்து கொண்டு வீடுகளுக்கான திறப்புக்களை உரிய குடும்பங்களிடம் கையளிப்பாா்கள்.
உலக குடியிருப்பு தினம் 1986 ஆம் ஆரம்பிக்கப்பட்டு இந்த வருடத்துடன் 35 வருடங்கள் நிரைவடைகின்றன்ற முன்னிலையில் ஐக்கிய நாடுகள் மனித் குடியிருப்பு அமையம் ´இவ் ஆண்டின் தொனிப்பொருளாக´ காபன்வாயு அற்ற ஓர் உலகின் நகர செயற்பாடுகள் (Accelerating Urban Action for a Carbon free world) இத் தொனிப்பொருளில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் நகரமயமாக்குதல், கட்டிடங்கள், நிர்மாணப் பொருட்களுக்காக இயற்கைச் சூழலை மாசுபடுத்தல், நகரில் நிரம்பிய வாகனங்கள் ஆகாய போக்குவரத்துக்கள், மின்சக்தி வளங்கள், எரிவாயு உற்பத்திகள் போன்ற தொழிற்சாலைகள் கழிவுகள், மற்றும் காலநிலை மாற்றங்ளை கட்டுப்படுத்தி நகரங்களில் பச்சைத் தாவரங்களை நாட்டி கிரீன் பீல்ட் திடடங்களை ஏற்படுத்துதல் மற்றும் இயற்கை வளங்களை அழிக்காது அதனை அவ்வாறே பாதுகாப்பதுடன் ஒர் திட்டமிட்ட மனித குடியிருப்புக்குத் ஏற்ற வகையில் நகரங்களை திட்டமிடல் போன்ற திட்டங்களை உலக குடியிருப்பு அமையம் இவ் ஆண்டும் சகல நாடுகளுக்கும் முன்னிலைப்படுத்தியுள்ளன.
இயற்கை அன்னை அளித்த பெரும் செல்வமும் புவியின் மேற்பரப்பில் காணக்கூடியதாக உள்ள குன்றுகள், மலைகள், மலைத் தொடா்கள், மேட்டு நிலங்கள். சமவெளிகள் ஆறுகள், ஏரிகள், விருட்சங்கள் என்பவைகளையே நாம் சூழல் என கருதுகின்றோம். மனிதனின் தேவைகளையும் சேவைகளையும் நிறைவேற்றும் நோக்குடன் தற்காலத்தில் சூழல் எனும் எண்ணக்கரு கட்டிடங்கள் நகரங்கள் குடியிருப்புகள் பூங்காக்கள் பெருந்தெருக்கள், நீர் தேக்கங்கள், குளங்கள் என்பவற்றையே சூழலாக நம் கண் முன் கொண்டு வருகின்றன.
அந்த வகையில் சூழலானது மனிதனின் அடிப்படைத் தேவைகளாகிய நீர்த்தேவை, உடைத்தேவை, உணவுத்தேவை உறைவிடத் தேவை என்பவற்றை உள்ளடக்கியதாக புவித்தொகுதி காணப்படுகின்றது. மேலும் வளிக்கோளம். நிலக்கோளம் என்பவற்றை உள்ளடக்கியதாக உயிர்கோளம் காணப்படுகின்றது. சூழலானது பரந்து விரிந்து ஒரு நிலப்பரப்பு என நாம் கருதினோமனால் அதை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மானிடா் ஒவ்வொருவரினதும் கடமையாகும். அதன்படி சூழலை ஒரு கண்ணோட்டத்தில் பாா்வையிடும்போது அதன் ஒவ்வொரு நன்மை. தீமைகளையும் அறிந்து கொள்ள முடியும்.
இலங்கையின் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி திட்டம் ஒன்றினை அமுல்படுத்திய இலங்கையின் அப்போதைய பிரதம மந்திரியாக பதவி வகித்த காலம் சென்ற ரணசிங்க பிரேமதாச, 1985 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவு ஜமெய்க்காவின் கிங்ஸ்டன் நகரில் இடம் பெற்ற ஐக்கிய நாடுகள் மனித குடியிருப்பு ஆனைக்குழு கூட்ட அமர்வின் போது முன்வைக்கப்பட்ட ஆலோசனையை அடிப்படையாகக் கொண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட ´உலக குடியிருப்பு தினம்´ இற்றைக்கு 35 வருடங்களுக்கு முன்னா் அதாவது 1986 அக்டோபா் மாதம் 05 ஆம் திகதி திங்கட்கிழமை முதற் தடவையாக உலகம் பூராகவும் நினைவு கூறப்பட்டது. அன்று தொடக்கம் ஒவ்வொரு வருடமும் அக்டோபா் மாதத்தின் முதலாவது திங்கட் கிழமையை உலக குடியிருப்பு தினம் சகல நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.
ஒரு மனிதன் இப் பூமியில் எப்போது தோற்றம் பெற்றானோ அவனுக்கென்று ஒரு முகவரி இருத்தல் வேண்டும். ஒவ்வொறுவருக்கும் குடியிருப்பதற்கு வீடு இருப்பது அவனது அடிப்படை உரிமையாகும் என ஐ.நா.மனித குடியிருப்பின் நோக்கத்திற்கமைய எமது நாட்டில் உள்ள சனத்தொகைக் கேட்ப வீடுகள் இருத்தல் வேண்டும் ஆனால் சனத்தொகை பெருகப் பெருக மனிதன் வீடுகளை நிர்மாணிப்பதற்காக இயற்கை வழங்களை அழிக்கின்றனா். சிலா் பாதை ஓரங்களில், மனித குடியிருப்புக்கு பொருத்தமற்ற கூடாராங்கள், பஸ் நிலையங்கள், லயன் அரைகள், புகையிரத நிலையஙகள், கடற்கரையோரங்களிலும் குடும்பம் குடும்பமாக வாழ்ந்து வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.
இலங்கையில் கூட வீடுகள் அற்ற குடும்பங்களுக்காக மேலும் 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகளை நிர்மாணிக்க வேண்டியுள்ளது. கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 3 இலட்சத்திற்கும் மேற்பட்டோா்கள் வாடகை வீடுகளிலும், சட்ட விரோத கொட்டில்களிலும், முடுக்கு வீடுகளிலும் வாழ்ந்து வருகின்றனா்.
அடுத்த ஐந்து வருடத்திற்குப் பிறகு இத் தொகை இரட்டிப்பாகலாம் ஆகவே இப் பிரச்சினைக்கு அரசாங்கம் நிலையானதொரு தீா்வுத் திட்டத்தினை வகுத்து வீடுகள் அற்ற குடும்பங்களுக்கு வீடுகளை நிரமாணித்தல் வேண்டும். இப் பிர்ச்சினைக்கு முக்கிய காரணம் கொழும்பு, கண்டி நகர பிரதேசங்களில் அரச தனியாா் காணிகள் இல்லாமையாகும். இவற்றுக்குத் தீா்வு தொடா் மாடி வீடுகளை நிர்மாணிப்பதே சிறந்த வழியாகும்.