அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ்பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை ஆலங்குளம் வீதியிலுள்ள கடை ஒன்றின் கதவை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான உரப் பைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பகுதியிலுள்ள கடை ஒன்றில் அதன் உரிமையாளர் நெல் அறுவடையின் வியாபாரத்துக்காக உரைப் பைகளை களஞ்சியப்படுத்தி வைத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த கடைக்கு சென்ற போது கடை கதவின் பூட்டை இரும்பு வாளால் வெட்டி கதவை உடைத்து அங்கு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த உரைப் பைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.