நம்மில் பலரும் பெண்களுக்குத்தான் கூச்ச சுபாவம் இருக்கும் என நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் பல ஆண்களும் கூச்ச சுபாவம் கொண்டவர்கள் தான். இயல்பிலேயே சின்ன வயதில் இருந்தே கூச்ச சுபாவத்தோடு வளரும் பல ஆண்களைப் பார்த்திருப்போம். சில நேரம் பெண்களே அவர்கள் மீது மயங்கினால் கூட தயக்கத்தால் இவர்கள் காதலை சொல்ல மாட்டார்கள். அல்லது டேட்டிங் அழைப்பார்களா? என பெண்களே காத்திருந்தாலும் கூச்ச சுபாவசத்தால் எஸ் ஆகிவிடுவார்கள்.
சரி கூச்ச சுபாவம் கொண்ட ஆண்கள் எப்படி இதை சமாளிக்கலாம்? இதோ அவர்களுக்கான டிப்ஸ். ‘கூட்டத்தில் கொஞ்சம் கூச்சம் போகும். இதனால் பெண்களை தனியே சந்திக்காமல் பார்க், ரெஸ்டாரண்ட் என கூட்டம் குழுமியிருக்கும் இடத்துக்கு அழைத்துப்போய் பேசவேண்டும் மனம் விட்டுப் பேச வேண்டும். தயக்கத்தை விட்டுவிட்டாலே கூச்சம் ஓடிப்போய்விடும். ஆண் மட்டுமல்ல பெண்ணும் தயக்கத்தை தயங்காமல் விட்டுவிட வேண்டும்.
அதேபோல் அவர்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை நினைவு கூர்ந்தால் ஆண்கள் ரொம்பவும் குஷியாகிவிடுவார்கள். அந்த நேரத்தில் பெண்களும் ஏக குஷியில் இருப்பார்கள். அப்போது டேட்டிங் சமாச்சாரம் பேசினால் ஒர்க் அவுட் ஆகிவிடும்.
இதேபோல் ஒருவரை, ஒருவர் புகழ்ந்து கொண்டே இருந்தால் கூச்சமும், தயக்கமும் ஓடிப்போய்விடும். இதுதான் நாம் கேட்டது கிடைக்கும் நேரம்! அப்புறமென்ன ட்ரைப் பண்ணிப்பாருங்க.