நீங்கள் கணவன் மனைவி அல்லது காதல் ஜோடிகளாக இருக்கலாம். உங்களுடைய உறவில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா என்பதை எப்போதும் தெரிந்து கொள்ள வேண்டும். உங்கள் கணவர் அல்லது காதலர் வேண்டா வெறுப்பாக உங்களுடன் வாழ்கிறார் என்று உங்களுக்கு சந்தேகம் வந்தால் சில அறிகுறிகள் மூலம் அதை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும்.
ஆசையாக நீங்கள் அவரிடம் பேச செல்லும் போது அலைபேசி அல்லது மடிக்கணினி ஏதாவது எடுத்துக்கொண்டு பிசியாக இருப்பது போல காட்டிக்கொண்டால் உங்களிடம் பேசுவதை அவர் தவிர்க்க நினைக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் துணைவர் உங்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை வேண்டுமென்றே நிறைவேற்றாமல் இருப்பார். அல்லது மறந்துவிட்டது போல நடிக்கலாம். இந்த செயல்கள் மூலம் அவருக்கு உங்களின் மீது அக்கறை கிடையாது என்று உணர்ந்து கொள்ளலாம்.
தன்னுடைய கனவு, லட்சியம் இதைப்பற்றி மட்டுமே உங்களிடம் பேசிக்கொண்டு உங்களுடைய ஆசைகளை பற்றி கேட்கக்கூட விருப்பமில்லாமல் இருப்பார் உங்கள் கணவர். அதையும் மீறி நீங்கள் ஏதாவது கூறினால் வெறுப்பேத்துவதற்காக உங்களை கேலி செய்யக்கூடும்.
மன்னிப்பு கேட்பது உறவை பலப்படுத்தும். ஆனால் அதை கௌரவ குறைச்சலாக அவர் நினைத்தால் உங்களை அவர் மதிக்கவில்லை என்று அர்த்தம். தன்னுடைய ஆசைகளுக்கு ஏற்றாற்போல் உங்களை மாறச்சொல்லி கட்டாயப்படுத்துவார். இல்லையெனில் உங்களை கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட வாய்ப்பு உண்டு. மற்றவர்கள் முன்னிலையில் உங்களை வேண்டுமென்றே மட்டமாக நடத்தினால் உங்கள் கணவர் அல்லது காதலருக்கு சுத்தமாக உங்களை பிடிக்கவில்லை என்று தெரிந்து கொள்ளலாம். எனவே கவனமாக உங்கள் துணைவரை கையாளுங்கள் பெண்களே.