உக்ரைனில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவுமாறு பிரித்தானிய பேரிடர் அவசரக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுவரும் நிதி திரட்டும் திட்டத்தின் முதல்நாளில் 55 மில்லியன் பவுண்டுகள் திரட்டப்பட்டுள்ளது.
இந்த நன்கொடையில், ராணி, வேல்ஸ் இளவரசர் மற்றும் கேம்பிரிட்ஜ் டியூக் ஆகியோரின் நன்கொடைகளும் அடங்கும் என பிரித்தானிய பேரிடர் அவசரக் குழு தெரிவித்துள்ளது.நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கான மக்கள் மனிதாபிமான முயற்சிக்கு நன்கொடை அளித்தனர்.