இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 20 வயதேயான கர்ப்பிணி ஒருவர் கடிதம் எழுதி வைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம், குடும்பத்தாரை மொத்தமாக உலுக்கியுள்ளது.ஐதராபாத் நகரின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வரியா. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து செயற்பாட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் 21 வயதேயான மாரெட்டி ஆஷிர் என்பவருடன் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் கிடைத்தது.மிக குறைந்த நாட்களிலேயே இருவரும் நண்பர்களானதுடன், அது பின்னர் காதலாக மாறியது.இதனையடுத்து பிப்ரவரி 20ம் திகதி பெற்றோரின் ஒப்புதல் இன்றி ரகசியமாக கோவிலில் வைத்து ஐஸ்வரியா மற்றும் ஆஷிர் ஜோடி திருமணம் செய்து கொண்டுள்ளது.பின்னர் வாடகை அறை ஒன்றில் இருவரும் சில நாட்கள் குடும்பம் நடத்தியுள்ளனர். இந்த நிலையில், ஐஸ்வரியா திருமணம் செய்து கொண்ட தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து ஐஸ்வரியாவை நேரில் சந்தித்து, எச்சரித்ததுடன், முதலில் இருவரையும் வாழ்க்கைக்கு தேவையான பொருளீட்டும் படி கேட்டுள்ளனர்.மேலும், ஐஸ்வரியாவை தங்கள் குடியிருப்புக்கே அழைத்து சென்றுள்ளனர் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்.தமது விருப்பத்திற்கு எதிராக குடும்பத்தினர் செயல்படுவதாக கருதிய ஐஸ்வரியா, இனி மேலும் தமது கணவர் ஆஷிருடன் வாழ முடியாமல் போகலாம் என எண்ணியுள்ளார்.
இந்த விவகாரங்களால் மனமுடைந்த ஐஸ்வரியா ஒருகட்டத்தில் மீண்டும் வீட்டைவிட்டு வெளியேறி தமது நெருங்கிய நண்பர்கள் சிலருடன் பஞ்சிரா ஹில்ஸ் பகுதிய்யில் குடியிருந்து வந்துள்ளார்.இந்த தகவல் தெரியவந்த ஆஷிர் மீண்டும் ஐஸ்வரியாவை சந்தித்ததுடன், அவர்கள் நெருக்கமாக பழகத் தொடங்கியுள்ளனர்.இந்த நிலையில், தாம் கர்ப்பமானதை அறிந்த ஐஸ்வரியா அந்த தகவலை கணவர் ஆஷிருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
ஆனால், இது சரியான தருணம் அல்ல என்பதையும், கருவை கலைப்பதே தற்போதைய சூழலில் சரியான முடிவு எனவும் ஆஷிர் தமது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.கணவரின் முடிவை ஏற்க மறுத்த ஐஸ்வரியா, நேரடியாக ஆஷிரின் தாயாரை சந்தித்து பேசியுள்ளார்.ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகே முறைப்படி இருவருக்கும் திருமணம் செய்து தர இருப்பதாகவும், தற்போது கருவை கலைத்து விடவும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
ஆஷிர் மற்றும் அவரது குடும்பத்தினரின் இந்த முடிவால், தாம் ஏமாற்றப்பட்டதாக கருதிய ஐஸ்வரியா, நேரடியாக ஹாஸ்டலுக்கு சென்று, கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.கணவர் ஆஷிரால் தாம் ஏமாற்றப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் தாம் எந்த பிழையும் செய்துவிடவில்லை எனவும் ஐஸ்வரியா அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் வழக்குப் பதிந்துள்ளதுடன், இளம் வயது கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டதன் உண்மையான காரணம் தொடர்பில் விசாரித்து வருகின்றனர்.