இல்-து-பிரான்சிற்குள் தென்னாபிரிக்க வைரசின் தொற்று கட்ந்த ஒரு வாரமாக அதிகரித்து வருகின்றது»
«இருப்பினும் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது»
«வைத்தியசாலைகளில் அழுத்தம் அதிகரித்து வருகின்றது»
«தொற்றுக்களும் நாளாந்தம் சராசரியாக 30.000 தொற்றுக்களாக அதிகரித்து வருகின்றன»
«ஆனாலும் இல்-து-பிரான்சிற்குள் எந்த விதமான இந்தியக் கொரோனா வைரசின் தொற்றும் இல்லை»
என பிரான்சின் சுகாதாரம் மற்றும் ஒருமைப்பாட்டு அமைச்சர் ஒலிவியே வெரோன் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.