இலங்கையில் மேலும் 204 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது.அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, 109 ஆண்களும் 95 பெண்களுமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இந்த கொரோனா இறப்புகளில் ஐம்பது பேர் 30-59 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் மீதமுள்ள 149 பேர் 60 மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் மேலும் ஆயிரத்து 952 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.
இதன்படி கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 78ஆயிரத்து 168 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 4 இலட்சத்து 47ஆயிரத்து 757 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 59 ஆயிரத்து 985 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பல்வேறுப்பட்ட வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.