தமிழ்நாடு – ராமநாதபுரம் கீழக்கரை பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியலில் சேகரித்த பணத்தை இலங்கை மக்களுக்கு வழங்கினார்.
இந்த பணம் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. பில்சா சாரா என்ற மாணவி, தனது வீட்டில் உள்ள உண்டியலில் சேகரித்த 4400 இந்திய ரூபாயை நன்கொடையாக வழங்கினார்.
இலங்கையில் வாழும் மக்கள் பொருளாதார நெருக்கடியால் பட்டினியால் வாடும் நிலையில் தனது சேமிப்பை இலங்கை மக்களுக்கு வழங்குவதாக சிறுமி தெரிவித்துள்ளார். சிறுமியின் செயல்பாட்டை மாவட்ட ஆட்சியர் வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது