நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட வீட்டு வாடகைச் சட்ட ஆலோசனைக் குழுவினால், வீட்டு வாடகைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள இடைக்கால அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அந்தக் குழுவின் அறிக்கையில் முன்மொழியப்பட்ட திருத்தங்களைச் சேர்த்து வீட்டு வாடகைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவும், இதற்காக திருத்தப்பட்ட சட்ட மூலம் ஒன்றை தயாரிக்குமாறு சட்ட வரைவாளருக்கு ஆலோசனை வழங்கவும், நீதி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளை அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.
ஏழைகளின் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வாடகை வீடுகளில் இருக்கும் ஏழை குடியிருப்பவர்களைப் பாதுகாப்பதற்கும் 1972 ஆம் ஆண்டு 7 ஆம் இலக்க வீட்டு வாடகை சட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், வீட்டு வாடகைச் சட்டத்தின் காலாவதியான விதிகள், தற்போது வீட்டுத் துறைக்கும், குத்தகைக்கு விடப்பட்ட மற்றும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகளையும் பெரிதும் பாதித்துள்ளது.
எனவே, தற்போதைய தேவைகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்துவதற்கான அவசியம் அடையாளம் காணப்பட்டுள்ளது.