இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் மின்சார வாகனத் துறையை மேம்படுத்த ஆதரவு வழங்கவுள்ளார்.
அதற்கமைய VEGA Innovations எனப்படும் நிறுவனத்தினத்திற்கு இன்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் மின்சார முச்சக்கரவண்டி
இலங்கையில் முச்சக்கர வண்டி சாரதியாக மாறிய அமெரிக்க தூதுவர்
அங்கு மின்சார வாகனத் துறையை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்குவதற்கு ஒப்பந்தம் செய்துக் கொண்டுள்ளார்.
அதற்காக நிதி உதவிகளை வழங்கும் நிலையில் அதன் ஊடாக மின்சார முச்சக்கர வண்டி உட்பட மின்சாரத்தில் இயங்கும் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக VEGA Innovations நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா நிதியுதவி
அத்துடன் அங்குள்ள முச்சக்கர வண்டிகளை ஆர்வத்துடன் ஓட்டியும் பார்ப்பதற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சாங் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.