இலங்கையில் (15) நேற்று கொரோனா தொற்று காரணமாக 59 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,374 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை,
இன்றைய தினத்தில் மாத்திரம் 2,419 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
அதன்படி, மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 230,675 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், மொத்த கொரோனா தொற்றாளர்களில் 194,145 பேர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.