இலங்கையிலிருந்து கடத்தி வரப்பட்ட 6.6 கிலோ தங்கம் சிவகங்கையில் பறிமுதல் செய்யப்பட்டது. இதன்போது இருவர் கைதாகினர்.
நாட்டுப்படகுகளை பயன்படுத்தி இராமநாதபுரம் மாவட்டம் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக மதுரை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த படையினரே, தங்கத்தை பறிமுதல் செய்தனர். அங்கு காரில் வந்த 02 பேரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து அதிகாரிகள் அந்த காரை சோதனை செய்து, அதிலிருந்த 6.6 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்துள்ளனர்.