பேராதனை, முருதலாவ பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக அந்த பகுதி சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய சிறிபால ராஜபக்ஷ, 70 வயதுடைய அவரது மனைவி ஷீலா ராஜபக்ஷ மற்றும் அவர்களின் மகனான 38 வயதுடைய தம்மிக்க ராஜபக்ஷ என்ற மூவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
தந்தை 3ஆம் திகதியும், தாய் 14ஆம் திகதி மகன் கடந்த 23ஆம் திகதியும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த தம்மிகவின் இறுதி அஞ்சலி நடவடிக்கை நேற்று முன்தினம் கண்டியில் கொவிட் கட்டுப்பாடுகளுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.