ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த சாந்தன், திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, திருச்சி அரச மருத்துவமனையில் சாந்தன் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.
இவ்வாறான நிலையில், சாந்தன் தாய் தொடர்பில் தோழன் பாலன் என்பவர் முகநூலில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவு இதோ,
அன்று பார்வதி அம்மாள் சிகிச்சை பெற வந்தபோது வயதானவர் என்றுகூட பார்க்காமல் இரக்கமின்றி திருப்பி அனுப்பியது கலைஞர் மு. கருணாநிதி அரசாங்கம்.
இன்று கலைஞர் மகன் தமிழக முதலமைசச்ர் ஸ்டாலின் அரசாங்கம் சாந்தனின் தாயாருக்கு இரங்க மறுக்கிறது.
இறப்பதற்கு முன் தன் மகன் சாந்தனை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என்று 33 வருடங்களாக சாந்தனின் தாய் பார்வதி அம்மாள் காத்து இருக்கிறார்.
சாந்தன் உயிருக்கு அபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சாந்தன் மரணமடைந்தால் அவர் உடலையாவது தாயாரிடம் அனுப்பி வைக்குமா தமிழக அரசாங்கம்?
திமுக அரசாங்கம் இரங்க மறுப்பது ஆச்சரியம் இல்லை. ஆனால் கூட்டணியில் இருக்கும் வைகோ, திருமாவளவன், வேல்முருகன் போன்றவர்கள்கூடவா இரங்க மறுக்கின்றனர்? என அவர் கேள்வியும் எழுப்பியுள்ளார்.